நண்பர்களே,
தமிழில் ஓர்மை என்கின்ற சொல்லானது பலவிடங்களில் பயின்று வருகின்றது...சான்றாக, வள்ளுவர் தமது குறட்பாக்களில் கீழ்க்கண்டவாறு குறிக்கின்றார்.
"ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாய்ப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு".
இதன் பொருளாவது...உள்ளம் ஒன்றி எவ்விடத்தும் இருக்கும் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டால், தனக்கு விரும்பாவிட்டாலும் வாய்க்கக் கூடிய பிறப்பென்னும் நோய் கிடையாது.
"ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து
யார்மாட்டும்தேர்ந்து செய்வஃதே முறை"
இதன் பொருளாவது...மனம் ஒன்றி வேறுபாடு காட்டாது சரியான வழியில் எவரிடமும் சரியானவரைத் தேர்ந்தெடுப்பதே முறை.
வேதாத்திரி மகரிசியும், "ஓர்தல்" என்னும் சொல்லை "ஒன்றுதல்", "concentration" என்கின்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார். காண்க "ஓர்தலறம்".
எனவே, நான் கருதுவது யாதெனில் ஓர்மை என்கின்ற சொல்லுக்கும், ஓகநெறிக்கும் (yoga) நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழில் ஓக நெறியைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்தத் துவங்க வேண்டும்.
மேலே குறிக்கப் பட்டுள்ள இரண்டு குறட்பாக்களின் பலரது விளக்கங்களில் 'ஓர்ந்து" என்கின்ற சொல் "ஆய்ந்து" என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. ஓர்தலுக்கும், ஆய்தலுக்கும் உள்ள தொடர்பை கூடிய விரைவில் ஓர்வோம். ஓர்தலறம் குறித்த வேதாத்திரியின் பயன்பாட்டையும் காண்போம்.
நன்றி...
Friday, May 30, 2008
Subscribe to:
Posts (Atom)
